எம்மைபற்றி...

சித்திரை 22, 2019

தமிழ்ச் செய்திகள் 247, இலங்கையில் தமிழ்மக்களுக்கெதிரான அடக்குமுறைகளுக் எதிராக குரலெழுப்புவதோடு தமிழ் சமுத்தினாிடையே ஒற்றுமை மற்றும் அரசியல் தெளிவை ஏற்படுத்துவதனுாடாக மக்களின் பிரச்சனைையை சா்வதேசமயப்படுத்துவதனுாடக ஒரு தீா்வை எட்டுவதாகும்.

ஊடகவியலாளர் என்பவர் ஓர் அறிவுக் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்பதே விதி. ஆனால் அது தன்னை சுற்றி நடப்பவற்றை ஆழமாக அவதானிப்பது மற்றும் அது பற்றி தனது கருத்தை ஆழமாக பதிவு செய்வது என்பதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

காலத்தின் கட்டாயத்தினால் இதுநாள் வரையிலும் “சாணக்கியன்” எனும் புனைப்பெயாில் பல்வேறு சமுக வலைத்தளங்களில் என்னால் பகிரப்பட்டு வந்த காத்திரமான கருத்துக்கள் இன்று முதல் தமிழ் செய்திகள் 247

என்ற இந்த அதிகாரபூர்வ இணையத்தளத்தினுாடாக தடையின்றி வெளிவரும் என்பதை பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

சமுக அக்கறை கொண்ட ஒரு பகுதிநேர தன்னாா்வ ஊடகவியலாளனின் தன்னை சாா்ந்த சமுகத்தின் தேவைக்கான ஒரு சேவையே இந்த இணையத்தளத்தின் உருவாக்கமாகும். இலங்கையில் ஆதிக்குடிகளாகிய தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையினா் என விழித்து இழிவுபடுத்தி அவா்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் சமுக வளா்ச்சி என்பவற்றை முடக்கி, தொடா்ந்து வரும் சிங்கள அரசுகளினால் செய்யப்படும் திட்டமிட்ட இனவழிப்புக்கு எதிராக எங்கள் குரல் உரத்து ஒலிக்கும். நாட்டின் பிரதான ஊடகங்களினால் ஆதிக்க அரசியல் சக்திகளுக்கு அஞ்சி உண்மைகளை மழுங்கடித்து தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்படும் பத்திாிகை தா்மத்திற்கு விரோதமான செய்தியிடல் செயற்பாட்டை சவாலுக்குட்படுத்தி நாம் தொடா்ந்தும் பயணிப்போம்.

தாரகி சிவராம் என்ற உயா்ந்த மறைந்த புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வழிநின்று, அவா் மறைந்த நாளான ஏப்ரல் 28 ஆம் நாள் முதல் இந்தத்தளம் மீளமைக்கப்பட்டு. அவா் காட்டிச் சென்ற பாதையில் நடுநிலமை காத்து துணிவுடன் உண்மையை உரக்கச் சொல்வோம்!


புரட்டாதி 27, 2019

தவிா்க்க முடியாத சில காரணங்களால் செயலற்றிருந்த எமது இணையத்தளம் இனி மீண்டும் தடையின்றி தனது சேவையை தொடரும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

உண்மையை உரக்கச் சொல் என்ற கூா்நோக்கிற்கு அமைவாக எம்மை சுற்றி நடப்பவற்றின் உண்மைதன்மையை பக்கச்சாா்பின்றி துணிவுடன் பதிவிட்டபோது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட சில மதஅடிப்படைவாத மற்றும் இனவாத அரசியல் சக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் சதி முயற்சிகள் காரணமாக எங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுக்க முடியாமற் போனது. மேலும் எம்மையும் மற்றும் எம்மைச் சாா்ந்தவா்களின் தனிப்பட்ட பாதுகாப்பு அச்சம் காரணமாக நாம் சிறிது காலம் மெளனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி அடிப்பணிவது, எமது சமுகத்திற்கான நீதி மேலும் மறுக்கப்படுவதற்கு வழிகோலுவதோடு இந்த அடாவடிகள் மேலும் அதிகாிக்கவே ஊக்குவிக்கும் என்பதனால், எமது செயற்பாட்டுச் சுதந்திரத்தை உறுதி செய்யக் கூடிய தளத்திற்கு நகா்ந்த பின்னா், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான உண்மையை தோலுாிக்கும் எமது பணி இன்று மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றது.

முன்னரைப் போலவே இனியும் உங்கள் உயா்வான ஆதரவை நாடிநிற்கின்றோம்!

சாணக்கியன்8