இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர்

இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர்

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட தமிழ் பத்திரிகையாளர் செல்வகுமார் நிலாந்தனை இலங்கையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (டிஐடி) இன்று விசாரித்தது.

மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் நிலந்தன் இன்று காலை மட்டக்களப்பு டிஐடிக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு மூன்று மணி நேரம் நீடித்த தீவிர விசாரணையைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் அவரது பணிகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டது.

“உங்களுக்கு புலிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் (LTTE) உறுப்பினரா? உங்கள் உறவினர்கள் யாராவது புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் புலிகளுக்கு உதவி செய்தீர்களா? உங்களுக்கு புலிகளுடன் ஏதேனும் தொடா்புகள் உள்ளதா அல்லது புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு அரசியல் தலைவரான தயாமோகனுடன் தொடர்புகள் உள்ளதா? ”

“நீங்கள் பட்டிநாதம் (Battinaatham) அல்லது மீனகம் (Meenagam) வலைத்தளத்தை இயக்குகிறீர்களா? நீங்கள் ஒரு பத்திரிகையாளராக எத்தனை ஆண்டுகள் இருந்தீர்கள்? நீங்கள் எந்த ஊடகங்களுக்கு வேலை செய்கிறீர்கள்? எந்த சர்வதேச ஊடகங்களுக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள்? ”

அவா் தனது தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை வெளியிடுமாறு டிஐடியால் கோரப்பட்டார். அவரிடம் அவரது கணக்குகள் மற்றும் கடவுச்சொற்கள் குறித்து கணிசமான அளவு கேள்விகள் கேட்கப்பட்டன, மேலும் அவரது பேஸ்புக் (Facebook) கணக்கு, வாட்ஸ்அப்(WhatsApp) கணக்கு, மின்னஞ்சல் (Email) கணக்கு, வங்கி கணக்கு மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுக்கு முழு அனுமதியையும் தரும்படி வற்புறுத்தினா்.

நிலந்தன் தனது நிதி ஆதாரம் பற்றி விரிவாக விசாாிக்கப்பட்டாா்

“உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் கிடைக்குமா? எந்த நாட்டிலிருந்து எந்த பணம் வருகிறது? யார் யார் உங்களுக்கு பணம் அனுப்பியது? நீங்கள் ஒரு அறக்கட்டளை வைத்திருக்கிறீர்களா? ”

இந்த விசாரணையைத் தொடர்ந்து டிஐடியினா் நிலந்தனிடம் மேலுமொரு விசாரணைக்கு அழைக்க வேண்டி ஏற்படலாம் என்று கூறினார். இந்த விசாரணையினால் கடும் அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான நிலந்தன், “எனக்கு இருந்த கடைசி சுதந்திரத்தை அவர்கள் பறித்துக் கொண்டாா்கள்” என்று கூறினார்.

செல்வகுமார் நிலாந்தன் முன்னர் வடக்கு கிழக்கு மாகாண செய்தி சேகாிப்புக்காக விசாரிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவா் தமிழ் கால்நடை விவசாயிகளின் நிலத்தில் இராணுவ உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் குறித்து அறிக்கையிட்டதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர் அரசாங்க ஊழல் குறித்து புகார் அளித்ததற்காக அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.