இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது

இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது

நேற்றுமுந்தினம் இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டத்தினை மேலுமொரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

கொழும்பு நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்திய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இது இரண்டாவதுமுறையாக நீட்டிக்கப்பட்டுவதாக அரசாங்கம் தொிவித்துள்ளது.

இந்த நீட்டிப்பை கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டணியும் (TNA) கடுமையாக எதிர்த்திருந்தது.

அரச படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் இந்த அவசரகால சரத்துகள்கள் மூலம், பரவலான தேடுதல் நடவடிக்கைகள், காலவரையரையற்ற தடுப்புக்காவல்கள் மற்றும் கைதுகளை மேற்கொள்ளபட்டுவருகின்றன.

இதனைப் பயன்படுத்தி அரச படையினரால் ஊடகவியளாளர்கள் பல்கலைக்கழக மாணவச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனிதஉாிமைச் செயற்பாட்டாளா்கள் அச்சுறுத்தப்படுவதும், காரணமின்றி கைதுசெய்வதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.

அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்து பதட்டநிலையில் வைத்திருப்பதன் மூலம் தனது குறுகிய அரசியல் மற்றும் தோ்தல் ஆதாயத்தினை ஈட்டுவதற்காகவே இந்த அவசரகாலச் சட்டத்தினை தொடர்ந்து நீடித்து வருகின்றது என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.