தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது

தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சி (NDP) முன்வைத்த இந்த பிரேரணைக்கு, ஏனைய அனைத்து கட்சிகள் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதோடு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் இரங்கலையும் தெரிவித்து, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கைக்கு அழைப்பும் விடுத்துள்ளது.

புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செரில் ஹார்ட்கேஸில் நாடாளுமன்றத்தில் கூறுகையில்:

சபை, (a) இலங்கையில் வன்முறை மற்றும் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது; (b) ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை ஊக்குவிக்கவும், மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கவும் இலங்கை அரசிடம் அழைப்பு விடுங்கள்; (c) ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றின் கீழ் கட்டளையிடப்பட்டுள்ளபடி, இலங்கை தனது கடமைகளை தெளிவாக குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்ற கனடாவின் அழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அத்துடன் அனைவருக்கும் பொறுப்புக்கூறல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவு இலங்கைத் தீவில் மக்கள்; மற்றும் (d) 2009 இல் நடந்த ஆயுத மோதலின் கடைசி கட்டம் உட்பட இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையை கோருதல்.

செரில் ஹார்ட்கேஸில், புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்

அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச மனித உரிமைகளுக்கான விமர்சகராக புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை குறித்து சுயாதீன விசாரணையை அனுமதிக்க இலங்கைக்கு அழைப்பு விடுத்து ஒருமித்த ஒப்புதல் பிரேரணையை முன்வைக்குமாறு என்னிடம் கோரப்பட்டது. இந்த பிரேரணை அனைத்து தரப்பினரால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் அது பொது சபையின் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது என்பதில் நான் பெருமையடைகின்றேன். “

“இது ஒரு வரலாற்று முடிவு! இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு கனடா ஐ.நா.வை கோருகின்றது” என்று லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கனேடிய பாரம்பரிய மற்றும் பன்முக கலாச்சார செயலாளருமான கேரி ஆனந்தசங்கரி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் அவர் ஹார்ட்கேஸில் மற்றும் பிரேரணையை ஆதரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.