படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்

படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தின்போது கடற்படை அதிகாரியால் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவை சேர்ந்த பத்திரிகையாளர் சண்முகம் தவசீலன் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ஆனால் கடற்படையோ தமது அதிகாரி தவசீலனால் தாக்கப்பட்டதாகக் கூறிய புகாரின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிசாரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பத்திரிகையாளர் மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரில், அவர் கடற்படை அதிகாரியால் துன்புறுத்தப்பட்டதாகவும், முல்லைத்தீவு போலீசாரும் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் தொிவித்தார்.

எதிர்காலத்தில் காணாமல் போனரின் குடும்பங்களின் கவனஈர்ப்பு போராட்டங்களில் கடற்படை தலையிடமாட்டாது என்று ஆணைக்குழுவின் விசாரணையில் ஆஜராகியிருந்த கடற்படை பிரதிநிதி தொிவித்தார். தவசீலனால் முன்வைக்கப்பட்ட புகாரினடிப்படையில் முல்லைத்தீவு காவல்துறை மற்றும் கோட்டபாய கடற்படை முகாம் என்பவற்றிலிருந்து அறிக்கைகளை கோரிய ஆணைக்குழு விசாரணையை ஒத்திவைத்தது.