ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார்?

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரி யார்?

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையான சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தான் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டபாயவுக்கும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜம்மாத்திற்க்கும் (என்.டி.ஜே) இடையிலான நெருங்கிய தொடர்பு பற்றிய பரவலான தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இந்த அமைப்பின் தலைவரான சகரான் என்பவரால்தான் இந்தத் தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து உருவான பாதுகாப்பு நிலமைகளை காரணம்காட்டி சிறுபான்மை இனங்களை ஒடுக்க முயற்சிப்பது, எதிர்கருத்து கொண்டவா்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி மெளனிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் இராணுவம், அதன் உளவுத்துறை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் குழு என்பன இந்த விஷயங்களுக்குப் பின்னால் இருப்பதை தெளிவாக்குகிறது.

கோட்டபாய ராஜபக்ச இவ்வாறான விடயங்களில் மிகவும் பிரபலமானவா். அவர் படுகொலைகள் மற்றும் வெள்ளை வேன் கடத்தல்களில் கைதேர்ந்தவர்.

குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் உள்ள உண்மையை கண்டுபிடிக்க முதலில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அவர்களால் இயக்கப்படும் குழுக்களிடம் விசாரிப்பதன் மூலமாகத்தான் உண்மையைக் கண்டறிந்து நீதி நிலைநாட்ட முடியும்.

கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நட்சத்திர விடுதிகளிலும் தேவாலயங்களிலும் ஐ.எஸ் ஆதரவு இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இது இலங்கையில் அதிகமான வெளிநாட்டவா்கள் கொல்லப்பட்ட ஒரு தாக்குதல் சம்பவமாகும்.

ஏற்கனவே இத்ததையதொரு தாக்குதல் சம்பவம் திட்டமிடப்படுவதாக இந்திய உளவுத்துறையால் இலங்கை அதிகாரிகளுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த தாக்குதலைத் தடுக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தவறியது குறித்து பலமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இலங்கை அரசின் புலனாய்வுப்பிாிவின் அதிகாரிகள் என்.டி.ஜே அமைப்பிற்கு நிதியளித்ததாக வெளியான தகவல்களுடன், அரசாங்க பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறையுடனான அமைப்புகளின் தொடர்புகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ என்.டி.ஜே அமைப்பிற்கு கொழும்பில் அலுவலகம் அமைக்க காணியை பெற்றுக் கொடுத்தார் என்ற தகவலை வெளியிட்டாா்.

அதேபோல், குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் துஷாரா இந்தூனிலும், இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ராஜபக்ஷவிடம் என்.டி.ஜே அமைப்பு உதவிகளை பெற்றதாக கூறினார்.

முன்னதாக இலங்கையில் என்.டி.ஜே மற்றும் இது போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் தோற்றம் குறித்து அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமாவும் இலங்கை அரசாங்கத்தை 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எச்சரித்திருந்ததாக இந்தூனில் கூறினார்.

அப்போதே இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அறிந்திருந்தும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ன நடவடிக்கை எடுத்தாா் என்று நாங்கள் கேட்கிறோம் என்று அவர் கூறினார்.

அவர் அமைதியான முஸ்லிம்களின் சமூகத்தை இரண்டாகப் பிரிக்க முயன்றார். இது தனது புதிய அரசியல் முயற்சிகளில் தனக்கு உதவும் என்று அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அவர் ஒரு குழுவை மற்றொன்றுக்கு எதிராக பலப்படுத்தினார். இதுபோன்ற 200 மசூதிகள் உள்ளன என்றும் அவற்றை அமைப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் உதவினார் என்றும் பசில் ராஜபக்ஷ கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு வெடிபொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று பயிற்சியளித்த இராணுவச் சிப்பாய் ஒருவரை அதிகாரிகள் தற்போது தேடி வருகின்றனா்.

அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ராஜிதா சேனரத்ன, கடந்த ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் படுகொலையில் குறைந்தது நான்கு ராணுவ அதிகாரிகள் தொடா்புபட்டுள்ளதாகவும், ராஜபக்ஷவுடன் தொடர்புடைய பல என்.டி.ஜே அமைப்பின் உறுப்பினா்கள் இன்னமும் இலங்கை உளவுத்துறையில் இருப்பதாகவும் கூறினார்.