பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.

பௌத்த வன்முறைகள் குறித்து எழுதிய சிங்கள எழுத்தாளரை அச்சுறுத்திய சிறிலங்கா காவல்துறை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அதிகரித்து வரும் முஸ்லீம்-எதிர்ப்பு சிங்கள-பௌத்த தீவிரவாதத்தைப் பற்றி எழுதி வரும் சிங்கள அரசியல் கட்டுரையாளரான மூத்த பத்திரிகையாளர் குசல் பெரேராவை கொழும்பில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு (OCPD) அச்சுறுத்தியுள்ளது. கொழும்பை தளமாகக் கொண்ட ஆங்கில செய்தித்தாள் டெய்லி மிரரின் ஆசிரியரிடமிருந்து ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறிலங்கா காவல்துறை முயல்வதாக கொழும்பில் உள்ள சுதந்திர ஊடக இயக்கம் (FMM) கடந்த வெள்ளியன்று தெரிவித்தது. 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க ‘பொதுமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை’ (ICCPR) சட்டம் என்று அழைக்கப்படும் விதிகளின் கீழ் ஊடகவியலாளரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியை கோரியது சிறிலங்கா காவல்துறை. சிறிலங்கா காவல்துறை ICCPR சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளைத் தொடர முயல்வதன் மூலம் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றிற்கு கடுமையான அச்சுறுத்தலான “ஆபத்தான முன்னுதாரணத்தை” ஏற்படுத்தியுள்ளதென FMM தொிவிக்கின்றது.

சக்திக சத்குமார

இதேபோன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னும், ஏப்ரல் 01 அன்று போல்கஹவேலாவில் உள்ள சிறிலங்கா காவல்துறை, தேராவத பௌத்த பிக்குகளிடையே ஓரினச்சேர்க்கை குறித்த சிறுகதைக்கு, ‘மத வெறுப்பை’ தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் 33 வயதான சக்திக சத்குமார என்ற விருது பெற்ற சிங்கள நாவலாசிரியரை தடுத்து வைக்க முயன்றது. ICCPR  சட்டத்தில் பிணை வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை. இந்த 2007 சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றத்தினால் மட்டுமே கைதிகளை பிணையில் விடுவிக்க முடியும்.

“பண்டைய சிங்கள ராஜ்யங்களில் பௌத்த பிக்குகளின் பங்கு பற்றிய சர்சைக்குரிய வரலாற்று பதிவுகளை மறுக்கும் வரலாற்று கேள்விகள் இருந்தபோதிலும், இந்த சமூகம் தீவிரமாக பதிலளிக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், இந்த நாட்டை அவர்கள் விரும்பும் விதத்தில் ஆட்சி செய்ய தீவிர பௌத்த பிக்குகளிடமா நாங்கள் கொடுக்கிறோம்? இது ஒரு தீவிர சிங்கள பௌத்த அரசுக்கு வழிவகுக்காதா?”, என குசல் பெரேரா தனது சமீபத்திய வலைப்பதிவு இடுகைகளில் ஒன்றில் தொிவித்திருந்தார். அந்த வலைப்பதிவு இடுகையின் தலைப்பு: “சிங்கள பௌத்த அரசு தெருக்களில்தான் முடிவு செய்யப்படுகிறது”.

குசல் பெரேரா
குசல் பெரேரா

எனினும் குசல் பெரேரா தனது எழுத்துக்களில் சிங்கள தேரவாத பௌத்த தீவிரவாதத்தின் இனப்படுகொலை கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வதை தவிர்த்திருந்தாலும், அதன் வெளிப்பாட்டின் பின்னணியில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஆதரவளிக்கும் நபர்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

மே 17 அன்று வெளியிடப்பட்ட ‘இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து தோன்றும் போலியான சிங்கள- பௌத்த வன்முறைகள்’ என்ற தலைப்பில் டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியான கட்டுரை குறித்து அதன் ஆசிரியர்களிடம் விசாரணை செய்தது சிறிலங்கா காவல்துறை.

அந்த கட்டுரையில், குசல் பெரேரா, கொழும்பில் உள்ள சர்ச்சைக்குரிய சிங்கள கத்தோலிக்க பேராயர் மால்கம் ரஞ்சித், பௌத்த மதத்திற்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை ஆதரிப்பதையும், தமிழ் அமைச்சர் மனோ கணேசன் தனது சக சிங்கள மந்திரி மங்கள சமரவீராவுக்கு முரணாக சென்று “இலங்கை ஒரு சிங்கள-பௌத்த நாடு என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியதையும் தனது கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்தார்.

டெய்லி மிரர் கட்டுரை கீழே மீண்டும் தரப்பட்டுள்ளது: