பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்

பௌத்த பேரினவாதமும் எதிர்மறை விளைவும்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற  தாக்­கு­தலையடுத்து நாட்டில் பௌத்த பேரி­ன­வா­தத்தின்  செயற்­பாடு  தலை­வி­ரித்­தா­டு­கின்­றது.  முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­திகள் செயற்­ப­டு­வ­துடன் அவர்­களை அடக்கி ஒடுக்­கு­வ­தற்குத்  தொடர்ந்தும் முயன்று வரு­கின்­றனர்.  தமிழ் மக்­களைக் கடந்த மூன்று தசாப்­த­ கா­ல­மாக  அடக்கி ஒடுக்கிவரும் பேரி­ன­வா­திகள்  தற்­போது முஸ்லிம் மக்­களை நோக்கி தமது செயற்­பாட்டை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலை அடுத்து முஸ்லிம்  மக்­களை இலக்கு வைத்து வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து வி­டப்­ப­டலாம் என்ற அச்சம் ஏற்­பட்­டி­ருந்­தது.  இஸ்­லா­மியத் தீவி­ர­வா­தி­களின்  செயற்­பாட்டை அடுத்து ஆத்­தி­ரம் கொண்ட பெரும்­பான்­மை­யின மக்கள் இத்­த­கைய செயற்­பா­டு­களில் இறங்­கலாம் என்று கரு­தப்­பட்­டது. ஆனாலும் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை உட்­பட மதத் தலை­வர்கள் மற்றும்  அர­சாங்­கத்­ த­ரப்­பினர்  எடுத்த நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக இத்­த­கைய வன்­மு­றைகள் தீவிரமாக இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

தாக்­குதல் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர்  மே மாதம் 13 ஆம் திக­திக்குப் பின்­னரே திட்­ட­மிட்­ட­ வ­கையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. நீர்­கொ­ழும்பில் ஆரம்­பித்த  முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை குரு­நாகல், கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில்  தலை­வி­ரித்­தா­டி­யது. இதனால்  முஸ்லிம் மக்­க­ளுக்குப் பெரும் சேதங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

தாக்­குதல் நடை­பெற்­ற­வுடன் வன்­ மு­றைகள் இடம்­பெற்­றி­ருந்தால் ஆத்­தி­ர­மீ­தத்­தினால் இடம்­பெற்­றது என்று கரு­த மு­டியும். ஆனால் தாக்­குதல் இடம்­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர் அர­சியல் சுய­நலம் கரு­திய சில தரப்­பி­ன­ரது செயற் பா­டுகள் கார­ண­மா­கவே முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக  வன்­மு­றைகள் கட்­ட­ விழ்த்­து­ வி­டப்­பட்­டன.  இந்த வன்­மு­றை­களின்  பின்­னணி தொடர்­பிலும்  தாக்­கு­தல்­தாரி­களின் திட்­டங்கள் குறித்தும் விசா­ர­ணை­க­ளின்­போது பல்­வேறு விட­யங்கள்  வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

அர­சியல் குளிர் காயும் முயற்சி

ஊர் இரண்­டு­பட்டால் கூத்­தா­டிக்குக் கொண்­டாட்டம் என்­பதைப் போன்று இனங்­க­ளி­டையே  முரண்­பாட்டைத் தோற்­று­வித்து வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து வி­டு­வதன் மூலம் அர­சியல் குளிர்­காய நினைக்கும்  ஒரு த­ரப்­பினர் தொடர்ச்­சி­யா­கவே இத்­த­கைய வன்­முறைக் கலா­சா­ரத்தை ஊக்­கு­விக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­ வ­ரு­கின்­றனர். இத்­த­கை­ய­வர்கள்  இன ரீ­தி­யா­கவும், மத­ ரீ­தி­யா­கவும் பிரி­வி னை­களை ஏற்­ப­டுத்­த முயற்­சிக்­கின்­றனர்.

இதன் தொடர்ச்­சி­யா­கவே முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் முஸ்லிம் மக்­க­ளையும் இலக்­கு­ வைத்து வன்­மு­றைகள் அரங்­கேற்­ றப்­பட்­டன. பௌத்த மேலா­திக்க சக்­தி­களின்  செயற்­பா­டு­களும்  இந்த விட யத்தில் முக்­கியப் பங்­காற்­றி­யி­ருந்­தன. பௌத்த பேரி­ன­வா­திகள் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­வித்து இனக் க­ல­வ­ரத்தை  உரு­வாக்­கு­வ­தற்­காக  தொடர்ச்­சி­யாக  செயற்­பட்டு வரு­கின்­ற னர்.

முஸ்லிம் தலை­வர்கள் மீதான போர்க்­கொடி

இதன் ஒரு கட்­ட­மா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கப்­பட்­டது. அமைச்­சரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் மற்றும்  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா, மேல் மா­காண ஆளுநர் அசாத் சாலி  ஆகி­யோ­ருக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுகள்  சுமத்­தப்­பட்­டன. பொது எதி­ர­ணியின் சார்பில் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அத்­துடன் அவர் பதவி வில­க­ வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.

இதே­போன்றே ஆளு­நர்­க­ளான அசாத் சாலியும் ஹிஸ்­புல்­லாவும் பதவி வில­க­வேண்டும் என்று பௌத்த பேரி­ன­வா­திகள்  கோரிக்கை விடுத்து வந்­தனர். குண்­டுத் தாக்­கு­தல்­க­ளுடன் இவர்­க­ளையும் சம்­பந்­தப்­ப­டுத்தி குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டன. வெறும் குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இவர்கள் பதவி வில­க­வேண்­டு­மென்று கோரப்­பட்­ட­போ­திலும் அதற்­கான ஆதா­ரங்­களோ சாட்­சி­களோ  சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்­டு­வந்த எதி­ர­ணி­யினர் அதனை உட­ன­டி­யாக விவா­தத்­துக்கு எடுக்­க­ வேண்டும் என்று கோரி­யி­ருந்­தனர்.  இந்தச் சர்ச்சை பல­ நாட்­க­ளாக நீடித்­த­துடன் விவா­தத்துக்­கான தினமும் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே தாக்­குதல் சம்­ப­வங்­க­ளு­டனோ அல்­லது தாக்­கு­தல்­தா­ரி­க­ளு­டனோ அர­சி­யல் த­லை­வர்கள் எவ­ரேனும் தொடர்­பு­ பட்­டி­ருந்தால் அவர்கள் மீது விசா­ரணை நடத்­தப்­ப­ட­ வேண்டும். அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளானால் தண்­டிக்­கப்­ப­ட­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

ஆனால் அர­சியல் சுய­ந­லத்தை மட்டும் கருத்தில் கொண்டு இனங்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்­ட­ வ­கையில்  முஸ்லிம் அர­சி­யல்­த­லை­வர்கள் மீது குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு அவர்­களைப் பதவி வில­கு­மாறு கோரி நாட்டில் வன்­மு­றையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு  சில தரப்­பினர் செயற்­பட்­டி­ருந்­தனர். இந்தப் பின்­ன­ணி­யி­லேயே மூன்று முஸ்லிம் தலை­வர்­க­ளையும் பதவி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அணி­ தி­ரண்ட சிங்­கள பேரி­ன­வா­திகள்

குற்­றச்­சாட்­டு­களை மட்டும் கருத்­தில்­கொண்டு எத்­த­கைய நட­வ­டிக்­கை­யையும் எடுக்க முடி­யாத நிலை  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வுக்கும் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை யில் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் இந்த மூவ­ரையும்  பதவி விலக்­கு­மாறு கோரி உண்­ணா­வி­ர­தப் போ­ராட்­டத்தில் குதித்­தி­ருந்தார்.

மூன்று தினங்கள் தேரரின் போராட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது.  அத்­து­ர­லிய ரத்ன தேரர் போராட்­டத்தை ஆரம்­பித்­த­தை­ய­டுத்து சிங்­களப் பேரி­ன­வா­திகள் அதற்கு ஆத­ர­வாக  அணி­தி­ரண்­டனர்.  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் பொது­ மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கப்­பட்ட  பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் களத்தில் இறங்­கி­ய­துடன் அர­சாங்­கத்­துக்கு கால அவ­கா­சமும் வழங்­கி­யி­ருந்தார்.

ஞான­சார தேரரின் பாய்ச்சல்

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டின்­பேரில் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த ஞான­சார தேரரை விடு­விக்­கு­மாறு  பல்­வேறு தரப்­பி­னரும் கோரி­வந்­தனர். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோரும்  அவரை சென்று பார்­வை­யிட்­ட­துடன் அவரை விடு­விக்­க­ வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஜனா­தி ப­திக்கும் எடுத்­துக்­ கூ­றி­யி­ருந்­தனர்.

இவ்­வாறு பல தரப்­பி­னரும் கோரிக்­கை­ வி­டுத்­த­தை­ய­டுத்து சட்­டத்­தினால் கட்­டிப்­போ­டப்­பட்­டி­ருந்த ஞான­சார தேரர் ஜனா­தி ப­தி­யால் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

இவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட ஞான­சார தேரர், தான் எதிர்­கா­லத்தில் மத­போ­த­னை­களைச் செய்­து­கொண்டு அமை­தி­யாக வாழப்­போ­வ­தாக  அறி­வித்­தி­ருந்தார். பின்னர் மறுநாள் ஆவேசம் கொண்டு எழுந்த அவர் நாட்­டுக்­காக மீண்டும் தனது பணியை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக அறி­வித்­த­துடன் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தனது நிலைப்­பாட்டை மீண்டும் நிரூ­பிக்கும் வகையில் செயற்­படத் தொடங்­கி­யி­ருந்தார்.

தனது விடு­த­லைக்­காக  சிபார்­சு செய்த ஆளு­நர்­க­ளான ஹிஸ்­புல்லா, அசாத் சாலி ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே அவர் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்தார். இவ்­வாறு பௌத்த பேரி­ன­வா­தி­களின்  செயற்­பாடு கார­ண­மாக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆளு­நர்கள் இரு­வ­ரையும் பதவி வில­கு­மாறு கோரி­ய­தை­ய­டுத்து அவர்­களும்  பதவி வில­கல் க­டி­தங்­களைச் சமர்ப்­பித்­தி­ருந்­தனர்.

பௌத்த பீடங்­களின் ஆத­ரவு

இந்த வேளையில், அத்­து­ர­லிய ரத்­ன­ தே­ரரின் போராட்­டத்­துக்கு நான்கு பௌத்த பீடங்­களும்  முழு­மை­யான ஆத­ரவு வழங்­கி­ய­துடன் அவ­ரது கோரிக்­கை­களை  நிறை­வேற்ற  நட­வ­டிக்கை எடுக்­க வேண்டும் என்று கோரி­யு­மி­ருந்­தன. இத்­த­கைய கோரிக்­கைகள் கார­ண­மா­கவே ஆளு­நர்கள் பதவி வில­க­ வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

இதே­போன்றே அமைச்சர் ரிஷாத் பதி­யு தீனும் பத­வி­ வி­ல­க­ வேண்­டிய சூழ்­நிலை பௌத்த பேரி­ன­வா­தி­களின் போராட்­டத்­தால் ஏற்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு  பத­வி­களைத் துறக்­கா­விடின்  பௌத்த பேரி­ன வா­தி­களின் போராட்­ட­மா­னது முஸ்லிம் மக்கள் மீது திசை திருப்­பப்­படும் அபா­ய மும் காணப்­பட்­டது.  அதற்­கேற்­ற­ வ­கையில்  போராட்­டங்­களும்  தீவி­ரப் ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலை­யில்தான் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டினர். சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌசியின் வீட்டில் திங்­க­ளன்று காலை ஒன்­று­கூ­டிய  முஸ்லிம் எம்.பி.க்கள்  நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக  மேற்­கொள்­ளப்­பட்­டு வரும் நட­வ­டிக்­கைகள் குறித்து ஆராய்ந்­த­துடன்  பௌத்த பேரி­னவா­தி­களின் செயற்­பாட்­டால் முஸ்லிம் மக்கள் பாதிக்­கப்­ப­டா­த­ வ­கையில் எத்­த­கைய தீர்­மா­னத்தை எடுக்­கலாம் என்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டி னர்.

இத­னை­ய­டுத்தே அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் அனை­வரும் ஒன்­றாகப் பதவி வில­கு­வது என்று தீர்­மானம் எடுத்­தனர். இந்தத் தீர்­மானம் குறித்து பிர­தமர் ரணில் விக்­ர­ம­ சிங்­க­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டது. ஆனாலும் முஸ்லிம் அமைச்சர் அனை­வரும் பதவி வில­கு­வதை பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க விரும்­ப­வில்லை. ஆனாலும் அவர்­களின் சுயா­தீன முடிவில் அவர் தலை­யிட­வில்லை. இத­னை­ய­டுத்தே அமைச்­சர்கள் அனை­வரும் பதவி வில­கி­யி­ருந்­தனர்.

பேரி­ன­வா­தி­க­ளுக்கு பேர­திர்ச்சி

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒன்­றி­ணைந்த ஒற்­று­மை­யான இந்த முடி­வா­னது இனங்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி வன்­மு­றையை உரு­வாக்கி அர­சியல் குளிர்காய நினைத்த பௌத்த பேரி­ன­வாத சக்­தி­க­ளுக்கு  பேர­திர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.  தமது எண்ணம் நிறை­வேற்­றப்­ப­டா­த­ வ­கையில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள்  செயற்­பட்­டமை  அவர்­க­ளுக்குப் பெரும் ஏமாற்­றத்தை அளித்­தி­ருந்­தது.

தமது சமூ­கத்­துக்குப்  பாதிப்பு ஏற் ப­டப் போ­கின்­றது என்­பதைக்  கருத்தில் கொண்டு  முஸ்லிம் தலை­மைகள் எடுத்த இந்த முடி­வா­னது  வர­லாற்றில் பதி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­ய­வற்றில் அங்கம் வகிக்கும்  உறுப்­பி­னர்கள் அனை­வ­ருமே தமது அமைச்சுப் பத­வி­களைத் துறந்­தி­ருந்­தனர். இந்தப் பதவி துறப்­பா­னது இன­வாத சக்­தி­க­ளுக்கு அதிர்ச்­சி­ வைத்­தியம்  அளித்­தி­ருந்­தது.

ஹக்­கீமின் இரா­ஜ­தந்­திரம்

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சிங்­களப் பௌத்த பேரி­ன­வாத சக்­திகள்  கடும் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்தி அவ­ருக்கு எதி­ராக செயற்­பட்டு வந்­தன. இதன் கா­ர­ண­மாக  ரிஷாத் பதி­யு­தீனின் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செல்­வாக்­கா­னது பெரு­ந்தொகையான முஸ்லிம் மக்கள் மத்­தியில் அதி­க­ரித்து வந்­தது. பேரி­ன­வா­தி­களின்  இத்­த­கைய செயற்­பாடு கார­ண­மாக ரிஷாத் பதி­யுதீன் முஸ்­லிம்­களின் பெருந்த­லைவராகும் நிலை­மையும் உரு­வா­கி­யி­ருந்­தது.

ஆனால் தற்­போது சமூ­கத்தின் நலன்­ க­ருதி ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  எடுத்­துள்ள இந்த முடி­வா­னது முஸ்லிம் மக்கள் மத்­தியில் மீண்டும் முஸ்லிம் காங்­கி­ரஸை பலம்­பெறச் செய்­தி­ருக்­கின்­றது.  தமக்­காக  தமது தலை­மைகள் ஒன்­றி­ணைந்து ஓர­ணியில் நின்று தமது பத­வி­களைத்  துறந்­துள்­ளமை தொடர்பில் முஸ்லிம் சமூகம் தற்­போது பெரு­மைப்­ப­டு­கின்­றது.

முஸ்லிம் தலை­மைகள் எடுத்த முடிவின் கார­ண­மாக  பௌத்த பேரி­னவாத சக்­தி­களின்  எண்ணம் நிறை­வே­ற­வில்லை. இதே­போன்றே அர­சியல் குளிர்காய நினைத்த தரப்­பி­னரின் செயற்­பாடும்  தோல்­வி­யுறச் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் உயிர்த்த ஞாயிறு குண்­டுத் தாக்­கு­தல்­களைச் சாட்­டாக வைத்து ஆட்­சியைக் கைப்­பற்றும் வகையில் நாட்டில் இன வன்­மு­றையை ஏற்­ப­டுத்­தலாம் என்ற தோர­ணையில் எந்தத் தரப்பு செயற்­பட்­டதோ அந்தத் தரப்பு குறித்து தற்­போது சிறு­பான்­மை­யின மக்கள் நன்கு அறிந்­துள்­ளனர்.

சிறு­பான்­மை­யி­னரின் ஒற்­று­மையின் அவ­சியம்

அர­சியல் சுய­ந­லத்­துக்­கா­கவே தம்­ மீது  சிங்­கள மக்­களை ஆத்­திரம் கொள்­ள­ வைப்­பதற்கு இந்தத் தரப்பு முயற்­சித்­துள்­ள­மையை முஸ்லிம் மக்கள் தற்­போது உணர்ந்­துள்­ளனர். இதே­போன்றே தமிழ் மக்­களும் தற்­போது இத்­த­கையோரின் செயற்­பா­டு கள் தொடர்பில் நன்கு உணர்ந்­துள்­ளனர். இதன் கார­ண­மா­கவே தமிழ் தலை­மை­களும் தற்­போது முஸ்லிம் தலை­மை­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொ­டுக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

சிறு­பான்­மை­யின மக்­களின் ஒற்­று­மையின் அவ­சியம் கூட பேரி­ன­வாத சக்­தி­களின் இத்­த­கைய செயற்­பாட்­டால்  உண­ரப்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி  பெரும்­பான்­மையின சிங்­கள மக்­களின் ஆத­ர­வைப் பெற்­று­வி­டு­வ­தற்கு முயன்­ற­வர்­களின் செயற்­பா­டா­னது பிள்­ளையார் பிடிக்­கப்போய் குரங்­கான கதை­யாக மாறி­யி­ருக்­கின்­றது.

தவறை உணர்ந்த பௌத்த பீடங்கள்

தற்­போது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ள முஸ்லிம் தலை­வர்கள் தமது பொறுப்­பு­களை நிறை­வேற்றும் வகையில் அமைச்சுப் பத­வி­களை மீண்டும் ஏற்­றுக்­கொள்­ள­ வேண்டும் என்று நான்கு பௌத்த பீடங்­களும் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுத்­துள்­ளன. மல்­வத்து, அஸ்­கி­ரிய, ராமஞ்ஞ மற்றும் அம­ர­புர ஆகிய நான்கு பீடா­தி­ப­தி­களும் ஒன்­றி­ணைந்தே இந்தக் கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர்.  இதன்­மூலம் முஸ்லிம் சமூ­கத்தைப் பழி­வாங்கும் வகையில் சிங்­களப் பேரி­ன­வாத சக்­திகள் செயற்­பட்­டுள்­ளமை நிரூ­ப­ண­மா­கின்­றது. ஏனெனில் அத்­து­ர­லிய ரத்ன தேரரின் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தின் போது அவ­ரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய நான்கு பௌத்த பீடங்களும் இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வினயமாகக் கோரியுள்ளன. இதிலிருந்து தாம் இழைத்த தவறை பௌத்த பீடாதிபதிகள் உணர்ந்துள்ளமை தெளிவாகின்றது.

சுயநல நோக்கோடு செயற்பட்டோரின் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. முஸ்லிம் அரசி யல் தலைமைகள் தமது ஒற்றுமையின் மூலமும் சகிப்புத் தன்மையின் மூலமும் இதனை தற்போது அம்பலப்படுத்தியிருக்கின்றன.

ஜனாதிபதியின் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பும் தற்போதைய நிலையில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் மஹிந்த அணியினருடனும் இணையப் போவதில்லை என்றும் அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவித்து அரசியல் வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுத்தால் ஆதரவு வழங்கப்படும் என்றும் இல்லையேல் நடுநிலை வகிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

இந்த விடயமும் தற்போதைய நிலையில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி அமையப்போகின்றன என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கின்றது. மொத்தத்தில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியலில் குளிர்காய நினைத்த தரப்பினருக்குப் பாதகமான நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் சிறுபான்மையினத் தலைவர்கள் இவ்விடயங்கள் குறித்து சிந்தித்து ஒற்றுமையாகச் செயற்படுவதன் மூலமே தமிழ், முஸ்லிம் மக்களுக்கான தீர்வைக் காண முடியும் என்பதை பேரினவாதிகளின் செயற்பாடுகள் நன்கு உணர்த்தியுள்ளன.