ஈஸ்டர் தாக்குதலால் ஏற்பட்ட அனுதாபத்தைப் கொண்டு தமிழ் கிராமத்தை அபகரிக்கும் சிங்கள அரசு

ஈஸ்டர் தாக்குதலால் ஏற்பட்ட அனுதாபத்தைப் கொண்டு தமிழ் கிராமத்தை அபகரிக்கும் சிங்கள அரசு

கொழும்பின் ஆக்கிரமிப்பு ‘தேசிய வீடு அபிவிருத்தி அதிகாரசபையானது (NHDA) எவ்வித சத்தமுமின்றி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரை-துரைப்-பற்று நிர்வாகப் பிரிவின் கொக்குளாய் மேற்கு கிராமத்தில் முகத்துவாரப்பகுதியில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கான வீடமைப்புத் திட்டமொன்றை கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்க முனைந்தது.

கொக்குளாய் கிராமம் மற்றும் குளம் அமைந்துள்ள இடம். [செயற்கைக்கோள் வரைபடம். நன்றி: கூகிள் எர்த்]
கொழும்பு அரசின் இலக்கு பெட்டியில் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், தமிழ் நில உரிமையாளர்களின் கடுமையான ஆட்சேபனைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு வன்முறை குடியேற்றவாசிகள் சிங்கள கத்தோலிக்கர்கள், சிறிலங்கா கடற்படையின் ஆதரவுடன் வந்திருந்தனர். போர் காலத்திலும் அதற்குப் பின்னரும் அவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். முகத்துவரம் என்பது கொக்குளாய் குளத்தின் வாய்பகுதியின் வடமுனையில் ஒரு மூலோபாய ரீதியில் அமைந்துள்ள கிராமமாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக் கிடையிலான எல்லை ஏரி வழியாக செல்கிறது.

மறைந்த இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா ‘வீட்டுவசதி, கட்டுமான’ மற்றும் ‘கலாச்சார விவகாரங்கள்’ அமைச்சராக உள்ளார். சஜித் பிரேமதாசாவின் அமைச்சே NHDA வை இயக்குகிறது.

ஹம்பாந்தோட்டாவைச் சேர்ந்த ஐ.தே.க அமைச்சர், எதிர்காலத்தில்
ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுகிறார்.

64 சிங்கள குடியேற்ற குடும்பங்களுக்கான வீட்டுவசதி திட்டத்தை சனிக்கிழமை திறந்து வைப்பதற்காக அவர் இப்பகுதிக்கு வருகை
தரவிருந்தார். தமிழ் கிராமவாசிகளின் எதிர்ப்புக்கு பயந்து கடைசி நிமிடத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சட்ட ஆவணங்களை வைத்திருக்கும் தமிழ் நில உரிமையாளர்கள் இருக்கும் நிலையில் இந்தத் திட்டம் தொடர்பாக மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலாளரிடம் கலந்தாலோசிக்க NHDA தவறிவிட்டது என்று மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் பகிரங்கமாக கூறியதும் இது ஒத்திவைக்கப்பட ஒரு காரணமாகும். ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவம் 1983 ல் தமிழர்களை தங்கள் கிராமத்திலிருந்து விரட்டியடித்திருந்தது.

மறைந்த ஆர். பிரேமதாசவின் (ஆரம்பத்தில் சிறிலங்கா பிரதமரும் பின்னர் சிறிலங்கா ஜனாதிபதியும்) காலத்தில், NHDA இன் கீழ் முகத்துவாரத்தில் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு பிரத்தியேகமாக 50 வீடுகளை உள்ளடக்கிய ஒரு வீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இருப்பினும், போர் வெடித்ததால், சிங்கள குடியேற்றவாசிகள்
முகத்துவாரத்தில் நிரந்தரமாக குடியேற தயங்கினர். 50 வீடுகளும் 10 ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்தன.

போர் முடிந்த பின்னர், இந்த வீடுகள் புனரமைக்கப்பட்டன. ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா கடற்படையால் சுமார் 350 சிங்கள குடும்பங்கள் கொண்டுவரப்பட்டன. யுத்த காலத்திற்கு முன்னர் தமிழில் சேவைகள் நடைபெற்ற தேவாலயம் சிங்களமயமாக்கப்பட்டது.

ஸ்ரீ திசாபுரா குணரத்னா தேரர் என்ற தீவிரவாத துறவி, குடியேற்றத்திற்கு வடக்கே ஒரு சிங்கள பௌத்த விகாரையை அமைத்து வருகிறார். சிங்கள குடியேறியவாசிகளுக்கு நிலம் மற்றும் வீட்டுத் திட்டங்களை எளிதாக்குவதன் மூலம் அவர்களை பௌத்தமதமாக்க விரும்புகிறார்.

சிங்கள குடியேற்றத்தை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் இலங்கை வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தமிழ் உரிமையாளர்களுக்கு சொந்தமான நிலங்களை NHDA க்கு மாற்ற
முயற்சித்தார்.

தமிழ் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்னும் தமது சொத்துக்களிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இலங்கை கடற்படையினால் தடுக்கப்பட்டு தவிக்கின்றனர்.

இலங்கை அரசு பாரம்பரிய தமிழ் தாயகத்தின் தொடர்ச்சியான நிலையை நிரந்தரமாக தடுப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முகத்துவாரத்தை புல்மோட்டையுடன் இணைக்கும் பாலத்தை இன்னமும் புனரமைக்கவில்லை.