தமிழ் மாணவத் தலைவர்களை ஆதாரமற்ற முறையில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்கா காவல்துறை

தமிழ் மாணவத் தலைவர்களை ஆதாரமற்ற முறையில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்கா காவல்துறை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிரான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விசாரணையைத் தொடர்ந்த சிறிலங்கா காவல்துறை, கடந்த வெள்ளிக்கிழமை ராணுவத்தால் மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட  பதாகைகள் மற்றும் பிற காட்சி பொருட்கள் மூலம் மாணவர் தலைவர்கள் இன மற்றும் வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதாக வாதிட்டனர். 2015 ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 உடன் இணை அனுசரனை அளிப்பதன் மூலம், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஏற்றுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு, இந்த போரின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரும் பதாகைகளை எவ்வாறு பிரிவினையை தூண்டக்கூடும் என்று திங்களன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் மாணவர் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் குருபரன் குமாரவடிவேல் கேள்வி எழுப்பினார்.

மேலும், மாணவர் ஒன்றியம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை பகிரங்கமாகவே செய்து வருகிறது. பகிரங்கமாக அறியப்பட்ட இந்த கோரிக்கைகள் இப்போது திடீரென்று எவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் என்று திரு குருபரன் கேட்டார். சிறிலங்கா பொலிஸின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட பொருள் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் பழமையானவை என தெரிகிறது என வழக்கறிஞர் குருபரன் குறிப்பிட்டார்.

மே மாதம் 3ம் திகதி அன்று கோப்பாய் பொலிசாரின் விண்ணப்பத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண நீதவான் பீட்டர் பால் இரு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்களையும் மே மாதம் 16 திகதி வரை தடுப்புக்காவலில் வைத்திருக்க உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மே மாதம் 8 திகதி அன்று நீதவான் தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவர் சிவராசா பாபில்ராஜ் மற்றும் செயலாளர் நவரத்னம் திவஹாரன் ஆகியோராவர்.

பாபில்ராஜ் சிவராசா மற்றும் திவஹாரன் நவரத்னம்

சிறிலங்கா காவல்துறையினர் தாக்கல் செய்த பி-அறிக்கையின்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அலுவலகத்தினுள் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை கோரும் பதாதைகளும் காணப்பட்டன. இந்த பதாகைகளில் இசைபிரியா மற்றும் பிற பொதுமக்களின் படங்களும் இருந்தன.

பி-அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 2-1 (f) மற்றும் 2-1 (h) ஆகியவை அடங்கும் என்று திரு குருபரன் கூறினார். ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருத்தல், இறக்குமதி அல்லது உற்பத்தி செய்யும் எந்தவொரு நபரையும் PTA இன் கீழ் கைது செய்ய முடியும் என்று PTA வின் 2-1 (f) கூறுகிறது, அதே நேரத்தில் 2-1 (h) மூலம் எந்தவொரு இன அல்லது மத குழுக்களுக்கு இடையில் வகுப்புவாத பிரிவினையை தூண்டும் காட்சிப்படுத்தல்கள் அல்லது குறியீடுகள் வைத்திருப்பவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.

PTA இன் பிரிவு 7.1 ன் படி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரால் அல்லது அதற்கு நிகரான ஒரவரால் ஒப்பமிடப்படாத கோப்பாய் சிறிலங்கா பொலிஸில் தாக்கல் செய்யப்பட்ட தடுப்புக்காவல் விண்ணப்பம் செல்லுபடியாகாது என்று குருபரன் வாதிட்டார்.

வழக்கறிஞரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியாளருமான குருபரன் குமாரவடிவேல்

வழக்கறிஞரும் கல்வியாளருமான குருபரண் குமாரவடிவேல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார்

மாணவர் அலுவலகத்திற்குள் துப்பாக்கி அல்லது வெடிமருந்துகள் எதுவும் காணப்படாததால் 2-1 (f) இனை பயன்படுத்த முடியாது. 2-1 (h) வாதமும் செல்லாதது, ஏனெனில் காவல்துறையின் பி-அறிக்கையின்படி கூட பல ஆண்டுகளாக திறந்த ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை வைத்திருப்பது இன அல்லது மத வேற்றுமையை ஏற்படுத்தும் என விவாதிக்க முடியாது. அத்தகைய வாதம் ஆதாரமற்றது என்று வழக்கறிஞர் கூறினார்.

தடுப்புக்காவலுக்கான விண்ணப்பம் செல்லாதது என்பதால், யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் பீட்டர் பால் அவர்களிடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை விடுவிக்குமாறும் அல்லது அவ்வாறு இயலாதபட்சத்தில், பொலிஸின் கூற்றுப்படி காணப்படதமையினால் மாணவர்களை ஜாமீனில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்கும் படியும் கேட்டுக்கொண்டதாக குருபரன் கூறினார்.