யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவத் தலைவர்கள் பொலிசாரால் கைது - மதத்தலைவர்கள் கண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவத் தலைவர்கள் பொலிசாரால் கைது - மதத்தலைவர்கள் கண்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (மா.ஒ) இரண்டு தமிழ் மாணவர் தலைவர்களை வெள்ளிக்கிழமை கைது செய்தமையானது சிறிலங்கா புலனாய்வு அமைப்பு அண்மையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிகளை தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் ஜனநாயக ஆர்வலர்களை கட்டுப்படுத்த முற்படும் என்ற சாதாரண தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அச்சத்தை மேலும் உறுதிப்படுத்தும் சிறந்த உதாரணமாக அமைகிறது.

சிறிலங்கா இராணுவ உளவுத்துறை அவசரகால சட்ட விதிகளை பொருத்தமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத முறையில் அமுல்படுத்துகின்றது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மனித உரிமை ஆர்வலர் குருவானவர் எஸ்.வி.பி மங்களராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மாணவர் ஒன்றியத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்த மூத்த ஆர்வலர்களான தமிழ் கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் இந்து குருமார்களாகும்.

மேலும் அவர்கள் சிறிலங்கா அரசு வடகிழக்கில் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தில் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி செய்த துஷ்பிரயோகங்களை போல மீண்டும் செய்யாது குறித்த மாணவர் தலைவர்களை உடன் விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த கால தமிழ் போராட்டத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் பதாகைகள் வைத்திருந்ததற்காக இந்த இரு தமிழ் மாணவர் தலைவர்களையும் சிறிலங்கா ராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை என்பன கைது செய்திருந்தன.

தடுப்புக்காவலுக்கான காரணங்கள் மிகவும் ஆதாரமற்றவை என்று பாதிரியார் மங்களராஜா கூறினார்.

“பல தசாப்தங்களாக இருந்த சில படங்கள் மற்றும் பதாகைகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பதாகைகள் பொது ஊர்வலங்கள் மற்றும் பொது ஆர்ப்பாட்டங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவையாகும். இந்த படங்கள் மற்றும் பதாகைகளை வைத்திருந்ததற்காக கடந்த காலத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

பாதிரியார் மங்களராஜா

இந்த பதாகைகள் பல ஆண்டுகளாக மாணவர் ஒன்றியத்தின் வளாகத்தில் இருந்தன. இந்த இரண்டு மாணவர் தலைவர்களும் சமீபத்தில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் தமிழர்களுக்குத் தேவையான போதெல்லாம் தங்கள் தலைமைத்துவத்தை வழங்குகிறார்கள். அவர்கள் அகிம்சை மற்றும் ஜனநாயக வழியிலேயே அவ்வாறு செய்கிறார்கள். கட்டாயமாக காணாமல் போனவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் வழக்குகள், நிலங்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் அல்லது முள்ளி-வாய்க்கால் படுகொலைகளை நினைவுகூருதல் போன்ற எவையாக இருந்தாலும், அதற்கான தலைமை வழங்கியது இந்த மாணவர்கள் தான். அவர்கள் மிகவும் திட்டமிட்ட, ஒழுங்கான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் ஜனநாயக வழியிலேயே செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

உளவுத்துறை மற்றும் அரசாங்கத்திற்கு இது நன்கு தெரியும்.

“இவர்களின் கைதானது பல்கலைக்கழக சமூகத்தை மௌனமாக்குவதற்கும், தமிழர்களுக்கு தலைமை வழங்குவதிலிருந்து அவர்களை முடமாக்குவதற்குமான ஒரு முயற்சியாகவே நான் காண்கிறேன்”

பாதிரியார் மானகலராஜா.

மேலும் மதத் தலைவர்கள் யாழ்ப்பாண பத்திரிகைக் கழகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், தமிழ் மக்கள், குறிப்பாக கடந்த காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள், மீண்டும் ஒரு கடினமான காலகட்டத்தை அனுபவிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்கலைக்கழக சமூகம் வழங்கிய தலைமையை மிகவும் பாராட்டியிருந்தனர் என்று மத சமூகத்தலைவர்கள் தெரிவித்தனர்.