கட்டுவான பகுதியில் குண்டொன்று செயலிழக்கச் செய்யப்பட்டது

கட்டுவான பகுதியில் குண்டொன்று செயலிழக்கச் செய்யப்பட்டது

கட்டான – திம்பிரிகஸ்கொட்டுவ பகுதியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று பொலிஸாரால் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

பொதியொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் தமக்கு அறிவித்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விமானப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரை அழைத்து குண்டை வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்ததாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குண்டை செயலிழக்கச்செய்த சந்தர்ப்பத்தில் எவருக்கும் காயமோ சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முலம் www.newsfirst.lk