தமிழர் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச மற்றும் சுயாதீன விசாரணையை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்து கனடாவின் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி (NDP) முன்வைத்த இந்த பிரேரணைக்கு, ஏனைய அனைத்து கட்சிகள் மற்றும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதோடு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் இரங்கலையும் தெரிவித்து, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கைக்கு அழைப்பும் விடுத்துள்ளது. புதிய...
படையினரால் அச்சுறுத்தப்பட்ட முல்லைத்தீவு தமிழ் பத்திரிகையாளர்
இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையினர் ஒரு தமிழ் பத்திரிகையாளரை துன்புறுத்தியது குறித்து இலங்கை மனித உரிமை ஆணையம் (HRCSL) விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7 ம் தேதி நடந்த கவனஈர்ப்பு போராட்டத்தின்போது கடற்படை அதிகாரியால் தாக்கப்பட்டபின்னர் முல்லைத்தீவை சேர்ந்த பத்திரிகையாளர் சண்முகம் தவசீலன் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் கடற்படையோ தமது அதிகாரி தவசீலனால் தாக்கப்பட்டதாகக் கூறிய புகாரின்...
ரத்தன தேரரின் ‘முயல்’
முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் நீண்ட காலமாகவே, எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப்...
பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்?
கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற...
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’
‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும் காரணமல்ல; எமது அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம்களுமே காரணம் என்று விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். ஆனால், கல்முனை விவகாரத்தில், ‘நிலத்...