எம்மைபற்றி...

ஏறத்தாழ இன்றிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்புதான் இந்த எழுத்து என்பது பல இடங்களில் மனிதனினால் முதல் முதல் பதியப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எழுத்தை என்றைக்கு மனிதன் ஆரம்பித்தானோ அன்று தொடக்கம் தன்னுடைய அந்த அறிவை, எண்ணங்களை களஞ்சியப்படுத்த மனிதன் தொடங்கினான். அந்த ஆற்றல்தான் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த ஒரு கட்டம்.

ஊடகவியலாளர் என்பவர் ஓர் அறிவுக் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்பதே விதி. ஆனால் அது தன்னை சுற்றி நடப்பவற்றை ஆழமாக அவதானிப்பது அது பற்றி தனது கருத்தை ஆழமாக பதிவு செய்வது என்பதில் இருந்தே ஆரம்பிக்கிறது.

காலத்தின் கட்டாயத்தினால் இதுநாள் வரையிலும் “சாணக்கியன்”  எனும் புனைப்பெயாில் (Pen name) பல்வேறு சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த கருத்துக்கள் இன்று முதல் TamilNews247.com என்ற இந்த அதிகாரபூர்வ இணையத்தளத்திலிருந்து காத்திரமாக வெளிவரும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

சமுக அக்கறை (social responsibility) கொண்ட ஒரு பகுதிநேர தன்னாா்வ ஊடகவியலாளனாக (Freelance Generalist) தான் சாா்ந்த சமுகத்திற்கான ஒரு கடமையே TamilNews247.com என்ற இந்த இணையத்தளத்தின் படைப்பாகும்.தாரகி சிவராம் என்ற மறைந்த புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் நினைவாக, அவா் மறைந்த நாளான ஏப்ரல் 25 ஆம் நாளான இன்று இந்தத்தளம் ஆரம்பிக்கப்படுகின்றது. அவா் காட்டிச் சென்ற பாதையில் நடுநிலமை காத்து…

துணிவுடன் உண்மையை உரக்கச் சொல்வோம்!