சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு

சந்தேகத்திற்கிடமான வீட்டில் இருந்து போதைப் பொருட்கள் மீட்பு

கந்தான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டகம, எவரியவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். 

இதன்போது குறித்த வீட்டில் இருந்து 15 கிலோ கிராம் கஞ்சா, ஐஸ் 15 கிராம், குஸ் 25 கிராம் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகளுக்கான 8 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் தம்பதிகள் இருந்ததாகவும், தற்போது அவர்கள் அவ்வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முலம் tamil.adaderana

Leave a comment

Send a Comment

Your email address will not be published. Required fields are marked *